ETV Bharat / briefs

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எஸ்.பியிடம் மனு! - கனரக வாகனங்கள்

கன்னியாகுமரி : நாகர்கோவில் நகரப் பகுதிகளில் அனுமதியின்றி நுழையும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

Petition to Marxist Communist SP to stop heavy vehicles

author img

By

Published : Sep 27, 2020, 4:29 AM IST

அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விபத்து, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் காரணம் காட்டி இந்தத் தடை அமலில் உள்ளது.

எனினும், தற்போது பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் அதிகப்படியான கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மணல், எம்சாண்ட், கருங்கற்கள் சரக்கு ஏற்றி வரும் லாரிகளால் விபத்துகளும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், நகர் பகுதிகளில் பாதாள சாக்கடைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாத நிலையில், இந்த கனரக வாகனங்கள் மூலம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே நாகர்கோவில் நகரப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் வருவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நள்ளிரவு நேரத்தில் வரும் கனரக வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.