சூரிய கிரகணம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 01. 40 மணிக்கு முடிவடைந்தது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில் சூரிய கிரகணம் தொடங்குவதையும், சூரிய கிரகணம் முடிவதையும் அறிந்து கொள்ள ஏராளமான தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன.
பண்டைய காலம் தொட்டு இன்று வரை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் தொடங்குவதையும் முடிவதையும் உறுதி செய்ய கிராமங்களில் ஆட்டுக்கல்லில் உலக்கையை வைத்து அறிந்து கொள்ளும் முறைதான் நடைமுறையில் உள்ளது.

அதன்படி, தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியில் கிரகணம் தொடங்கும்பொழுது ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து, கிரகணத்தை பரிசோதித்தனர். அப்போது, ஆட்டுக்கல்லில் உலக்கை செங்குத்தாக நின்றது.
கிரகணம் முடிந்த பிறகு தானாகவே, உலக்கை ஆட்டுக் கல்லில் இருந்து கீழே விழுந்து விட்டது.
இதனை அப்பகுதி மக்கள் முழுவதும் பார்த்து மகிழ்ந்தனர்.