திண்டுக்கல் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த காவல் துறையினருடன் அவர்களது குடும்பத்தினருக்கும் மன அழுத்த கலந்தாய்வு பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர் வெஸ்லி, யோகா பயிற்சியாளர் பிரசாத் சக்கரவர்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, "நாம் எந்தவித அடிப்படையுமின்றி எல்லா தரப்பு மக்களையும் அணுகுகிறோம். இதனால் நமக்குத் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஒருவருக்கு ஒருமுறை கரோனா வந்துவிட்டால் திருப்பி வராது என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. எனவே, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தாலும் உங்களை நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, "கரோனா என்பது வியாதியல்ல. இது ஒரு நோய்த் தொற்று. இதற்கு சாதி, மதம், மொழி, இனம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. இது உலகம் தழுவிய பாதிப்பு என்பதால் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது நான் எதிர்மறையான எந்த விஷயங்களையும் கேட்கவில்லை. நம்பிக்கை தரக்கூடிய நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க வேண்டும். மேலும் எதிர்மறை எண்ணங்களை மட்டுமல்ல எதிர்மறையாக பேசக்கூடியவர்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
ஏனெனில், பயம் நம்மை பலவீனப்படுத்தும். மனதைரியம் தான் கரோனாவிற்கான மருந்து. ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல. உடல், மனம் இரண்டும் சமநிலையில் இருந்தால் தான் ஆரோக்கியம் என்பதை உணர முடியும். எனவே, மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியத்தைப் பெறுவோம்" என்று கூறினார்.
'கரோனா நேரத்தில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்போம்': திண்டுக்கல் டிஐஜி
திண்டுக்கல்: கரோனா ஏற்பட்ட காவலர்கள் எதிர்மறை எண்ணங்களை மட்டுமல்ல எதிர்மறையாக பேசக்கூடியவர்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் தெரிவித்தார்.