ETV Bharat / briefs

ஊசிமலையை காக்க திரண்ட மக்கள் - ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்! - ஊசி மலையை உடைக்க முயன்றதை எதிர்த்து பெண்கள் போராட்டம்

திருவண்ணாமலை : ஊசி மலையில் உள்ள பாறைகளை உடைக்க மீண்டும் ஜேசிபி இயந்திரம் கொண்டு பாதை அமைக்க முயற்சி செய்ததை எதிர்த்து மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஊசிமலையை காக்க திரண்ட மக்கள்  - ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்!

author img

By

Published : Jul 21, 2020, 4:46 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த இராந்தம் கிராமத்தில் ஊசி மலை உள்ளது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலையில் உள்ள பாறைகளை ஜல்லிக்கற்களாக உடைப்பதற்காக அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கடந்த 18ஆம் தேதியன்று சிலர் பாதை அமைக்க முயன்றனர்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, ஊசி மலையை பாதுகாக்கும் எண்ணத்தோடு பாதை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர்.

உரிய அனுமதியின்றி இயற்கை வளத்தை சுரண்ட முயன்றவர்களை அப்பகுதி மக்கள் தடுத்து வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் நூக்காம்பாடி கிராம நிர்வாக அலுவலர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலரும் சம்பவ இடத்திற்குச் சென்று பாதை அமைத்தவர்களிடம் பணியை தொடங்குவதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பின்னர் பணியை தொடங்குமாறு தெரிவித்தார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு உரிய ஆவணங்கள் சமர்ப்பிப்பதாக கூறிவிட்டு, அதற்கு மாறாக எந்தவித ஆவணமும் சமர்ப்பிக்காமல், இன்று மீண்டும் அப்பகுதியில் ஊசி மலையில் உள்ள பாறைகளை உடைப்பதற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் பாதை அமைக்க தொடங்கியுள்ளனர்.

இதனைக் கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊசி மலையில் மயில், முயல், மான் போன்ற எண்ணற்ற அரிய வகை வன விலங்குகள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் வனத்தை காப்போம், வனவிலங்குகளை காப்போம், நீர் வளத்தை காப்போம், மலையை உடைப்பதில் இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பிரதான சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.