ETV Bharat / briefs

தனிமைப்படுத்தும் முகாம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே தனிமைபடுத்தும் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனிமைப்படுத்தும் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Jun 13, 2020, 10:51 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குடிப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக தியாகதுருகம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் அமைப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தியாகதுருகம், காந்திநகர், பெரியாம்பட்டு, சடையான்குளம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சுமார் அரைமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி தாசில்தாரர் ரகோத்தமன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். இதனிடையே, தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.