திருவண்ணாமலை புது வானியகுல தெருவைச் சேர்ந்தவர் தேவநாதன். இவர் அரசுப் பேருந்து நடத்துநராக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரர் கேசவராஜ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து திருவண்ணாமலை முத்து விநாயகர் தெருவில் சீட்டு கம்பெனி நடத்தி வருகின்றனர். இவர்களது சீட்டு நிறுவனத்தில் 300 நபர்கள் மாதச்சீட்டு செலுத்தி வருகின்றனர்.
சீட்டு முதிர்வு அடைந்தும் பணம் திருப்பித் தராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் கட்டியவர்கள் தேவநாதன், கேசவராஜ் இருவரிடம் கேட்டபோது பணத்தை திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
நீண்ட நாள்கள் ஆகியும் பணம் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.அதற்கு தாங்கள் அரசு ஊழியர்கள் எனவும், எதுவும் செய்ய முடியாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சீட்டு நடத்தி 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சகோதர்கள் மீது நடவடிக்கை எடுகக்க் கோரி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.