ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் கட்டுபடுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அலட்சியமாக நடக்கும் நபர்கள் மீது காவலர்கள், மாநகராட்சித் துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசமின்றி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதங்களை வசூலித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திருநகர் காலனி, கடைவீதி, ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசமின்றி வருபவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து அபராதங்களை வசூலித்தனர்.
மேலும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று காவலர்கள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: பொதுமக்கள் தனித்திருக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்