நீட் தேர்வை எதிர்கொள்ளும் அச்சத்தில் தமிழ்நாட்டில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நாகையை அடுத்த சிக்கல் கடைத்தெருவில் நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு நீதி கேட்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவரும் தன்னார்வலருமான ஆசிரியர் சபரிமாலா தலைமையில் பெண் விடுதலை, மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.