கரோனா தொற்று காரணமாக கல்லூரிகளின் அனைத்துத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டன. இருப்பினும், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தவேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியிருந்தது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. கடந்த ஜூன் 22ஆம் தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனிடையே, தற்போது தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்றும், இதனை துறைத் தலைவர்களே இதற்கான தேதியை முடிவு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தி நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்ணின் தங்க நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!