கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (58).
விவசாயியான இவர் நேற்று (ஜூலை 15) நண்பகல் உளுந்தூர்பேட்டையில் இருந்து தனது மிதிவண்டியில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
குமாரமங்கலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையை அவர் கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அமைச்சர் கருப்பண்ணனின் பாதுகாப்புக்காகச் சென்ற வாகனம் மோதி, சாமிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது!