ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இவ்வாறு வழிபட்டால் மூதாதையர்களின் ஆன்மா சாந்தி அடைந்து அவர்களின் ஆசி குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று புரட்டாசி மகாளய அமாவாசை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10ஆம் தேதிக்கு பிறகுதான் மகாளய அமாவாசை வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 1ஆம் தேதி பிறக்கும் நிலையில் இன்றைய தினமே மகாளய அமாவாசை வருவது சிறப்பு தினமாக கருதப்படுகிறது.
ஆனால் கரோனா காரணமாக தற்போது நீர்நிலைகளில் நீராட அரசு, பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் இன்று முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பொதுமக்கள் நீராடி தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இன்று கடலுக்கு மக்கள் வருவதை தடுக்க காவல்துறையினர் மூலம் தீவிர கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது. வழக்கமாக புரட்டாசி மகாளய அமாவாசைக்கு கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அது தடைப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கன்னியாகுமரி பகுதியில் உள்ள குளம், தெப்ப குளங்களில் தங்கள் முன்னோர்களுக்கு வேத விற்பனர்கள் மூலம் தர்பணம் கொடுத்து வருகின்றனர்.
குமரி; மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் அளித்த மக்கள்! - குமரியில் முன்னோருக்கு தர்ப்பணம்
நாகர்கோவில்: கரோனா ஊரடங்கால் மகாளய அமாவாசையையொட்டி குமரி கடல் பகுதியில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் குளங்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.