கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான எம் இந்தியா ஆன்லைன் டெவலப்பர்ஸ், வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், அதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளதாகவும் வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்துள்ளது.
இதற்காக கோவையில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் நேர்முகத் தேர்விற்கு சென்றுள்ளனர். ஆனால், கரோனா ஊரடங்கின் மத்தியில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் அங்கு தேர்வு நடத்தப்பட்டதாக மாவட்ட வடக்கு வட்டாட்சியருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேரில் சென்ற வட்டாட்சியர் மகேஷ், நிறுவனத்தை ஆய்வு செய்த போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, உடனடியாக நேர்முகத் தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் அங்குள்ளவர்களை வெளியே செல்லுமாறும் உத்தரவிட்டார். பின்னர் நிறுவனம் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
தொடர்ந்து பேசிய வட்டாட்சியர், ஊரடங்கு காலத்தில் இது போன்று ஆட்களை அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். நிறுவனத்தை அரசு அனுமதி அளிக்கும் வரை திறக்கக் கூடாதெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம்!