2019ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய், ஜப்பானின் கன்ட்டா சுனேயமா (Kanta Tsuneyama) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ஆட்டத்தின் முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் வென்ற பிரணாய், இரண்டாவது செட்டை 15-21 என்ற கணக்கில் பறிகொடுத்தார். இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் பரபரப்பான மூன்றாவது செட் போட்டியில், பிரணாய் 14-21 என்ற கணக்கில் கன்ட்டா சுனேயமாவிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம், பிரணாய் 21-17, 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.