பூமியை கவசமாக இருந்து பாதுகாத்துவரும் ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய குளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987 இல் உருவானது.
இதனை நினைவுகூரும் வகையில் ஐ.நா. சபை செப்டம்பர் 1ஆம் தேதியை உலக ஓசோன் தினமாக 1995 இல் அறிவித்து கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய பசுமைப் படை சார்பில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அங்கு வந்த புதுமண தம்பதி மாரிமுத்துப் பாண்டியன்-நந்தினி ஆகியோர் காற்று மாசுபடுதலைத் தடுக்க வலியுறுத்தி மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழாவில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செண்பக சபரி பெருமாள், பாரதி அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.