உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், டவுன்டான் நகரில் நடைபெற்று வரும் 13ஆவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது. மறுமுனையில் ஆஃப்கானிஸ்தான் அணியோ இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது.
இதனால், இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு ஆஃப்கானிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி, வங்கதேசம் அணிக்கு எதிராக கடைசிப் போட்டியில் ஆடிய அதே 11 வீரர்கள் கொண்ட அணியுடனே இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
மறுமுனையில், ஆஃப்கானிஸ்தான் அணியில் மூன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியில் தவ்லத் சட்ரான், முகமது ஷேசாத், முஜிபுர்-ரஹ்மான் ஆகியோருக்கு பதிலாக, நூர் அலி சட்ரான், இக்ராம், அஃப்தப் அலாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியின் மூலம் நூர் அலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.