திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானல் முஞ்சிக்கல் பகுதியிலிருந்து வத்தலகுண்டு பிரதான சாலையில், விரைவாக போடப்படும் சாலைகள் தரமற்று காணப்படுகிறது.
குறிப்பாக, இந்தச் சாலைகள் போட்ட மறுநாளிலேயே பெயர்ந்துபோகும் அளவில் தரமற்று இருக்கின்றன. இது குறித்து அலுவலர்களிடம் கேட்டாலும், எந்த ஒரு பதிலும் அளிப்பதில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் நன்றாக இருக்கும் சாலையை புதிதாகப் போட்டு வருகின்றனர். இதனால் மக்களின் வரிப் பணம் பயனின்றி விரையம் ஆகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளை, தரமாக போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:குடிநீர் பணிகளுக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகள்: பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்