காத்மாண்டு: நேபாளத்தின் புதிய வரைபடத் திருத்த மசோதாவை (கோட் ஆப் ஆர்ம்ஸ்) அந்நாட்டு அவையில் தாக்கல் செய்துள்ளதை அடுத்து, இந்திய நேபாள எல்லை பகுதிகளில் மேலும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய வரைபடம் இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது உரிமை கோரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வரைபட மசோதாவை நேபாளம் நிறைவேற்றியதால் இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிகரிக்கும்.
ஜூன் 20ஆம் தேதி நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த மசோதா குறித்து விவாதம் நடந்தது. தொடர்ந்து இந்த வரைபடத்தை திருத்தி மசோதா நிறைவேற்றப்பட்டு, மேலவையின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இச்சூழலில், மேலவையின் ஒப்புதல் இன்று (ஜூன் 18) கிடைத்ததையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இம்மசோதா வைக்கப்பட்டுள்ளது. இவ்வரைபட திருத்த மசோதாவிற்கு எதிராக ஒரு வாக்குகள் கூட இரு அவைகளிலும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.