தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி செவத்த கவுண்டர் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகன் ஆதித்யா.
இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கை தருமபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அதில், மாணவன் 2018 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்துள்ளது.
மாணவன் ஏற்கெனவே நீட்தேர்வு இரண்டு முறை எழுதியும் தோல்வி அடைந்துள்ளார். வீட்டில் அருகில் உள்ளவர்களிடம் காவல் துறையினர் மாணவன் குறித்தும் அவரது பெற்றோர்கள் குறித்தும் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவன் ஆதித்யா உயிரிழக்கும் முன் தொலைபேசியில் யாரிடம் பேசினார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து உள்ளனர்.