செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (சிஓஏஐ) வரையறையை வருங்கால முறையில் திருத்துவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறாது என்றும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) சில ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னையை எடுத்துக்கொண்டாலும் அதில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் தலைமை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அக்டோபரில், உயர் நீதிமன்றம் அரசாங்கத்தின் வரையறையை ஏற்றுக்கொண்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டது. டோட் தகவலின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சட்டரீதியாக ரூ 1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். இதில் செலுத்தப்படாத உரிமக் கட்டணமாக ரூ. 92,642 கோடியும், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணமாக ரூ. 55,054 கோடியும் அடங்கும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, 2020 ஜனவரி 31ஆம் தேதிவரை ரூ. 195 கோடி நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது. ஆனால், வோடஃபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
வோடஃபோன் ஐடியா அதன் நிலுவைத் தொகையில் ரூ. 6,854 கோடியையும், டிஓடி மதிப்பீடு அதன் நிலுவைத் தொகையான ரூ. 58,254 கோடியாகவும் செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் சுய மதிப்பீட்டின் மூலம் அறியப்பட்ட நிலுவைத் தொகை ரூ. 21,533 கோடியாக உள்ளது. பாரதி ஏர்டெல், மறுபுறம் ரூ 18,004 கோடியை செலுத்தியுள்ளது. டிஓடி மதிப்பீட்டின்படி, ஏர்டெல்லின் நிலுவைத் தொகை ரூ 43,980 கோடியாகவும், நிறுவனத்தின் சுய மதிப்பீட்டின் மூலம் அறியப்பட்ட நிலுவைத் தொகை ரூ. 13,004 கோடியாகவும் உள்ளது.