நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாரம் தோறும் செவ்வாய் கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த பருத்தி ஏலத்தை கரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இது குறித்து விற்பனை சங்க நிர்வாக இயக்குநர் வாஞ்சிநாதன் கூறுகையில், "கடந்த ஒரு மாதத்தில் மூன்றாயிரம் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
கரோனா பரவலைக் கட்டுபடுத்தும் விதமாகவும் அனைவரின் பாதுகாப்பு நலன் கருதியும் இந்த வாரம் நடைபெறவிருந்த பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு ஏலத் தேதி, உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, நிலைமைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் கோயில் அருகே பெண் குழந்தை மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!