ETV Bharat / briefs

நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு - கடைகளுக்கு சீல் வைப்பு! - municipal commissioner inspection in Pallavaram

செங்கல்பட்டு : ஊரடங்கு விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு நடத்தினர்.

 municipal commissioner covid-19 curfew inspection in pallavaram

author img

By

Published : Jun 23, 2020, 2:59 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், இதுவரை 3 ஆயிரத்து 872 பேர் பாதிக்கப்பட்டும், 53 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர செங்கல்பட்டில் முழுமையான ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளை பொது மக்கள் பலரும் மீறி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் மதிவாணன் இன்று நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தார். விதிமுறைகளை மீறி திறந்த கடைகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன.

பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு அத்துமீறி வந்த இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை பிடித்து அபராதம் விதித்தார் அத்துமீறி திறந்த கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன.

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய ஆணையாளர் மதிவாணன், "சென்னை அடுத்த பல்லாவரம் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் உத்துழைப்பு வழங்க வேண்டும்.

கோவிட்-19 பரவல் தடுப்புப் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்து வீட்டிலேயே இருக்க வேண்டும். நகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரம், ஜமீன் பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறியவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.