திருச்சி வயலூர் ரோடு வாசன் வேலி பகுதியைச் சேர்ந்த தாய், மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப்பெற வந்தனர்.
இந்நிலையில் இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்துள்ளனர். ஆனால் அவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை.
அவர்களை சுற்றி மற்ற நோயாளிகளும் நின்று கொண்டிருந்தனர். இதனால் மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள், வெளி நோயாளிகள் என பலர் அச்சமடைந்தனர்.
நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.