சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் மாநகரம், புறநகர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 65 பேருக்கும், இதர மாநிலங்களைச் சேர்ந்த 5 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று நேற்று(ஜூலை 4) உறுதியாகி உள்ளது.
இதில் கரோனா தொற்று பாதித்து குணமடைந்த இருவர், மீண்டும் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் உள்ளிட்டோர் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
நேற்றைய (ஜூலை 4) நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,197-ஆக உயர்ந்துள்ளது. இதில் 337 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் 855 பேர் கரோனா பாதித்த நிலையில், சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு!
சேலம்: மாவட்டத்தில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில் 70 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.