ETV Bharat / briefs

நகர சுகாதார செவிலியர் உட்பட ஐந்து பேருக்கு கரோனா அறிகுறி

author img

By

Published : Jun 18, 2020, 12:18 PM IST

திருச்சி : மணப்பாறையில் நகர சுகாதார செவிலியர் உட்பட ஐந்து பேருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Corona status increased in manapparai
Corona status increased in manapparai

மணப்பாறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு, சென்னை உள்ளிட்ட இதர மாவட்டங்களில் இருந்து வந்த நபர்களுக்கு சுகாதாரத் துறையினர் தீவிரமாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் மணப்பாறை ராஜிவ் நகர், புத்தாநத்தம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இருவருக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தன.

இதையடுத்து இன்று திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றி வரும் ராயம்பட்டியைச் சேர்ந்த பெண் (வயது 27), கடந்த மாதம் கள்ளிப்பட்டி பகுதியில் கரோனா அறிகுறிகள் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் மூவருக்கு தற்போது மீண்டும் கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், மூவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் வசித்த பகுதிகளுக்கு தினமும் கிருமி நாசினி தெளித்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து மணப்பாறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வெளிமாவட்டங்களில் வருகை தந்தவர்கள் யாரேனும் இருந்தால், அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் மூலம் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நிச்சயம் கரோனாவை வெல்வோம் - உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.