இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில், பாஜக தனித்து 303 தொகுதியில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றுவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவினை, அவரது தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் இருக்கும் தன் வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தார். இணையதளத்தில் வெளியான இப்புகைப்படம் வைரலாகிவருகிறது.
இதனிடையே, முகேஷ் அம்பானி, ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்கும்போது, ஏன் மோடியின் தாயார் மட்டும் பங்கேற்கவில்லை என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.