ETV Bharat / briefs

பாலம் புதுப்பிக்கும் பணி - எம்எல்ஏ ஆய்வு - Trichy thiruverumbur

திருச்சி:  திருவெறும்பூர் ஒன்றியம் பனையங்குறிச்சி பாசன வடிகால் பாலம் புதுப்பிக்கும் பணியை எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

MLA inspected the renovation work of the bridge

author img

By

Published : Jul 24, 2020, 5:37 PM IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட திருச்சி - கல்லணை சாலையில் உள்ள பாசன வடிகால் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அந்தப் பாலத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது அந்தப் பாலம் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அப்பணியை எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜூலை 24) நேரில் பார்வையிட்டு சில ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது திமுக செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் குவளை பிரபா, குவளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அழகு செந்தில், ஒன்றிய குழுத்தலைவர் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் மற்றும் குவளக்குடி ஊராட்சி கழகத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.