ETV Bharat / briefs

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம் - எம்எல்ஏ ஆய்வு!

author img

By

Published : Jul 13, 2020, 9:49 AM IST

கன்னியாகுமரி: கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அழிக்கால் மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை, சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆய்வு செய்தார்.

MLA inspected the fishing village affected by the sea rage

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடலோர பகுதிகளில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்த காலங்களில் கடல் நீர் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கம். தற்போது வழக்கமாக உள்ள கடல் சீற்றத்தை விட இந்த ஆண்டு அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. இன்று (ஜூலை 12) ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால் போன்ற மீனவ கிராமங்களில் திடீரென கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

இந்நிலையில், கடல் அலையில் சிக்கி கடலோரம் இருந்த கட்டுமரம், வள்ளம் உள்ளிட்டவை சேதமடைந்தது. திடீரென ஏற்பட்ட கடல் அலையால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட அழிக்கால் மீனவ கிராமத்தில், நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆய்வு மேற்கொண்டார். இங்கு தூண்டில் வளைவு அமைக்க பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இது குறித்து எம்எல்ஏ கூறுகையில், “தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்படுவதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும், தூண்டில் வளைவு அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

இந்த ஆய்வின்போது திமுக ஒன்றியச் செயலாளர் சற்குரு கண்ணன், பேரூர் செயலாளர் பிரபா எழில் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.