பெருந்தலைவர் காமராஜரின் 118ஆவது பிறந்த நாளைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அணைகள் கட்டி, பாசனம் பெருக்கி, விவசாயம் வளர்த்து, பள்ளிகள் கட்டி, இலவச மதிய உணவை ஏற்படுத்திய, கல்விக்கண் திறந்த படிக்காத மேதை; தென்னாட்டின் காந்தி; தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் ஐயா.காமராஜர் அவர்களின் 118ஆவது பிறந்த நாளில் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.