ETV Bharat / briefs

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு கருத்துக் கூற வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்! - Tamilnadu Online Class

ஈரோடு: ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பின்னர் அது குறித்து கருத்துக் கூற வேண்டுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Minister Sengotaiyan Press Meet In Erode

author img

By

Published : Jul 10, 2020, 5:18 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரிய கொடிவேரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் கல்வியில் புரட்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் தொடங்குவதற்கு முன்பு அதைப் பற்றி கருத்துக் கூறினால் அதில் எந்த பயனும் இருக்காது.

ஆன்லைன் பயிற்சிக்கு மூன்று தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன. இன்னும் இரண்டு தொலைக்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. பயிற்சி தொடங்கப்பட்ட உடன் கருத்துகள் தெரிவிக்கலாம். அதில், உள்ள சில குறைபாடுகளை களைந்து நன்றாக செயல்படுத்த முடியும்.

ஆனால் தொடங்கும் முன்னரே கருத்துக் தெரிவித்தால் எந்த பயனும் இல்லை. கரோனா பிரச்சனை காரணமாக பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தாமதமாகி வருகிறது. சிஏ படிப்புகளுக்கான பயற்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவி தேர்வாணையத்தில் தேர்ச்சிபெற்று தற்போது அதே ஊரில் தணிக்கையாளர் ஆக பணியாற்றுவது இது ஒரு எடுத்துக்காட்டு" என்றார்.

முன்னதாக நடைபெற்ற ரத்ததான முகாமில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று ரத்ததானம் வழங்கி இளைஞர்களை பாராட்டினார்.

இதையும் படிங்க:வாழ்வூதியம் 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க...! ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.