12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் டி காக்கின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. 58 பந்துகளை எதிர்கொண்ட டி காக் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 69 ரன்களுடன் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அகமது மூன்று, புவனேஷ்வர் குமார், முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.