நாமக்கல் மாவட்ட, நகராட்சிப் பகுதியான சேந்தமங்கலம் சாலையில் 20க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அன்றாடம் மீதமாகும் இறைச்சிகளின் கழிவுகளை சேந்தமங்கலம் சாலையில் உள்ள கொசவம்பட்டி ஏரியின் கரையோரப் பகுதியில், சாலையின் இருபுறமும் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர்.
இந்தக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், சாலையோரத்தில் வீசி செல்வதால் அப்பகுதியில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. அத்தோடு இங்கு கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை 20க்கும் மேற்பட்ட நாய்கள் உண்பதோடு, அப்பகுதி வழியாக செல்வோரை சில சமயம் கடித்தும் வருகின்றன.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.