ETV Bharat / briefs

பணம் மோசடியில் ஈடுபட்ட பலே ஆசாமி கைது!

author img

By

Published : Jun 9, 2020, 5:03 AM IST

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பலே ஆசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Money laundering Person Arrested
Money laundering Person Arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவர் கடந்த ஆண்டு சின்னசேலத்தில் லட்சுமி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்ததார்.

அப்போது, பணத்தை 10 வாரங்ளுக்குள் இரட்டிப்பாக தருவதாகக் கூறி விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் ஏற்கனவே காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர் மீண்டும் தனது கைவரிசையை காட்ட தொடங்கினார்.

தற்போது, தியாகதுருகம் பகுதியில் கோல்டன் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி புதிதாக ஒன்று தொடங்கினார்.

இதையடுத்து, அவரிடம் ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர், தற்போது பணம் கொடுத்து ஏமாந்த இரண்டு பேர் என தனித்தனியாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் கொடுத்தனர்.

அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வரும் பலே ஆசாமி வெங்கடேசனை அதிரடியாக கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.