ETV Bharat / briefs

தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அடிப்படை வசதியில்லை- லாரி ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு! - நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்: ராசிபுரத்திற்கு வரும் லாரி ஓட்டுநர்களை தனிமைப்படுத்தும் இடத்தில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

Namakkal Lorry drivers complain of lack of infrastructure
அடிப்படை வசதியின்றி லாரி ஓட்டுநர்கள் தவிப்பு
author img

By

Published : Jun 22, 2020, 1:49 PM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்க தனியார் பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ராசிபுரத்தை அடுத்துள்ள குச்சிகாடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து இருசக்கரவாகனம் மூலம் சொந்தஊருக்கு வந்துள்ளனர். இதனையறிந்த வருவாய்த் துறையினர் அவர்கள் ஒன்பது பேரையும் ராசிபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அங்கு எவ்வித பாதுகாப்பும் (கிருமிநாசினி, சோப்பு) இல்லாமலும் கைகழுவுமிடம், கழிவறை உள்ளிட்ட இடங்கள் அதிக துர்நாற்றத்துடன் இருந்துள்ளது. மேலும், அதிகளவு ஈ மொய்ப்பதாகவும், மூன்று நாள்களுக்கும் மேலாகியும் எவ்வித பரிசோதனையும் மேற்கொள்ளாமல் இருப்பதால் மிகுந்த அச்சமாக உள்ளது எனவும் அவர்கள் காணொலி வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.