ETV Bharat / briefs

மணல் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் சினிமா பாணியில் கைது! - கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி : சுசீந்திரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் கடத்தல் கும்பலின் தலைவனை காவல்துறையினர் சினிமா பாணியில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

Leader of the sand smuggling gang arrested in cinematic style

author img

By

Published : Jun 19, 2020, 3:10 PM IST

கன்னியாகுமரியின் மிக முக்கிய ஆறான பழையாறு, அந்த மாவட்டத்தின் ஆஸ்ரமம், சுசீந்திரம், வடக்கு தாமரைகுளம், சுவாமிதோப்பு மணக்குடி காயல் ஆகிய பகுதிகளைக் கடந்து குமரியின் இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு கடக்கும் தடங்களான சுசீந்திரம், வடக்கு தாமரை குளம் உள்பட பல இடங்களில் இரவு நேரத்தில் ஜெ.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது.

இந்த மணல் கொள்ளையில் தென் தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல மணல் கடத்தல் தலைவன் ஆசைதம்பி(39) தலைமையில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த கும்பல் தொடர்பில் பல புகார்கள் வந்த நிலையில் ஆசைதம்பி குறித்து தகவல்களை ரகசியமாக காவல்துறையினர் சேகரித்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் கொள்ளையன் ஆசைதம்பி தலைமையில் சுசீந்திரம் பகுதியில் பழையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டு இருப்பதாக தகவலறிந்த காவல்துறை இந்த கும்பலை வளைத்து பிடித்தனர். ஆனால், மணல் கடத்தல் தலைவன் ஆசைதம்பி காவல்துறைனரிடம் இருந்து தப்பி ஓடி தலைமறைவானான்.

தலைமறைவான ஆசைதம்பியை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினருக்கு தென்தாமரை குளம் பகுதியில் அவர் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற சுசீந்திரம் மற்றும் தென் தாமரைகுளம் காவல்துறையினர், பதுங்கி இருந்த ஆசைதம்பியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.