திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபால். சலவைத் தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தார், அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் திடீரென கோபாலின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர், கதவை திறந்து வெளியில் வருவதற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோபாலை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.
இது குறித்து, தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து, அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோபாலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:வீடு புகுந்து கர்ப்பிணியை தாக்கிய காதலன்: இளம்பெண் தீக்குளிப்பு