ETV Bharat / briefs

கோவிட்-19 கண்டறிதல் சோதனை : லேப் டெக்னீஷியன்கள் தொடுத்த வழக்கு முடித்து வைப்பு!

சென்னை : கரோனா கண்டறிதல் சோதனைக்கான மாதிரிகளை எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

author img

By

Published : Jul 2, 2020, 10:51 PM IST

கோவிட்-19 கண்டறிதல் சோதனை : லேப் டெக்னீஷியன்களை தொடுத்த வழக்கு முடித்து வைப்பு!

கோவிட்-19 கண்டறிதல் சோதனைகள் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், "கோவிட்-19 தொற்று கண்டறிதல் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க, இ.என்.டி வல்லுநர்களையும், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்த வேண்டும். லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 2) நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் ஆஜரான பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி, லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறு. மாதிரிகள் சேகரிப்பது அவர்களின் அன்றாடப் பணி. அதற்கான அடிப்படை தகுதி அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் மனித உடற்கூறியல் படித்துள்ளனர்.

மாதிரிகள் சேகரிக்க மறுப்பதன் மூலம், லேப் டெக்னீஷியன்கள் தங்கள் கடமையை செய்வதில் இருந்து தவறுகின்றனர். தற்போது பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்படுகின்றனர். மருத்துவம் சாராத பணியாளர்கள் சுயநலமற்ற முறையில் பணியாற்றி வரும் நிலையில், லேப் டெக்னீஷியன்களின் பணி புறக்கணிப்பு செயல்பாடு கண்டனத்துக்குரியது" என கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கான மாதிரிகளை காது, மூக்கு, தொண்டை சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்கள் தான் எடுக்க வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு, தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு திரும்பப் பெறப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பரிசோதனையில் ஈடுபடும் போது லேப் டெக்னீசியன்களுக்கான பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது தொடர்பாக அரசிடம் புதிதாக மனு அளிக்கலாம் என்றும் அதனை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். கரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.