2019ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் இங்கிலாந்தின் ஹல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய நட்சத்திர வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா, இங்கிலாந்தின் மில்லீ டாம்லின்சனை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜோஷ்னா சின்னப்பா 12-10, 11-3, 11-9 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள மூன்றாவது சுற்றுப் போட்டியில் அவர், இங்கிலாந்தைச் சேர்ந்த சாரா ஜேன் பெர்ரி உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
இதேபோல் நடைபெற்ற ஆடவர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், 9-11, 4-11, 6-11 என்ற கணக்கில், எகிப்தின் கரீம் அப்துல் கவாத்திடம் தோல்வி அடைந்தார்.