புதுச்சேரி ஜிப்மர் கரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர் நோயாளிகளுக்கு நேற்று சிகிச்சை அளிக்க பணியில் இருந்த ஆண் செவிலியரை உதவிக்கு அழைத்தார்.
அப்போது, அவர் வராததால் அவரை மருத்துவர் கண்டித்துள்ளார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்த ஒன்று கூடி நேற்று வளாகத்தில் அரை மணி நேரம் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவருக்கு ஆதரவாக மற்ற மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
தகராறு செய்த ஆண் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாளாக கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கரோனா மருத்துவமனன வார்டு எதிரே மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு திரும்பினர்.