ETV Bharat / briefs

ஜல் சக்தி திட்டம் : ரூ. 2,264 கோடியை நேரடியாக ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும்!

சென்னை : குழாய்கள் மூலமாக நீர் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள 2,264 கோடி ரூபாய் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யத் தவறினால் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்படுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல் சக்தி திட்டம் : ரூ. 2264 கோடியை நேரடியாக ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும்!

author img

By

Published : Jul 9, 2020, 10:19 PM IST

ஜல் சக்தி திட்டத்தின்கீழ், குழாய்கள் அமைத்து அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நீர் வழங்க 2,264 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமப்புறங்களில் 'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ள இதற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடுவதாக அறிய முடிகிறது.

அதிமுக அரசின் இந்த முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் தேர்தல் 'கட்சி சார்பற்ற தேர்தல்' என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமின்றி, அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், மாவட்ட அளவில் டெண்டர் விட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயலில் ஈடுபடுவது அ.தி.மு.க. அரசுக்கு வெட்கக் கேடான செயலாகத் தோன்றவில்லையா?

ஆகவே 19 லட்சத்து 74 ஆயிரத்து 985 வீடுகளுக்கு, 'குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும்' ஜல் சக்தி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2,264 கோடி ரூபாய் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் திமுக இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்" என அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.