ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் ஞாயிற்றுக்கிழமை பாக்தாத்தில் அமைந்துள்ள வெளியுறவு அமைச்சகத்தில் அந்நாட்டின் பிரதிநிதி ஃபுவாட் ஹுசைனை சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈராக் தலைநகரில் வான்வழித் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல் படை தளபதி காஸ்ஸெம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த விஜயம் மேற்கொண்டார்.