ETV Bharat / briefs

துப்பாக்கிச் சுடுதல்: கலப்பில் கலந்துகட்டிய 'தங்க'ஜோடிகள்!

ஹனோவர் நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் தொடரின் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் என இரண்டு  பிரிவுகளிலும் ககன் நரங் - ஸ்ரீயங்கா சதாங்கி, அன்னு ராஜ் சிங் - அன்மோல் ஜெயின் ஆகிய இந்திய ஜோடிகள் தங்கம் வென்றன.

துப்பாக்கிச் சுடுதல்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்
author img

By

Published : May 10, 2019, 5:32 PM IST

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி, ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்றது. இதில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் ககன் நரங் - ஸ்ரீயங்கா சதாங்கி (Gagan Narang - Sriyanka Sadhangi) ஜோடி பங்கேற்றது.

இப்போட்டியில், சிறப்பாக செயல்பட்ட இந்த இணை 499.3 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இவர்களுக்குப் அடுத்தபடியாக ஃபின்லாந்தின் எமி ஹையர்கஸ் - மட்டியஸ் கியுரு ( Emi Hyrkas - Matias Kiuru) ஜோடி 491.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், நார்வேயின் ஹென்ரிக் லார்சன் - மரி லோவ்செத் (Henrik Larsen -Mari Loevseth) இணை 428.9 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றியது.

இதேபோல் முன்னதாக, நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்னு ராஜ் சிங் - அன்மோல் ஜெயின் (Annu Raj singh - Anmol Jain) இணை தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.