கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காகப் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது என்ற திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.
இந்தத் திட்டத்தின்படி மாலத்தீவில் சிக்கித்தவித்த தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 713 பேர் முதற்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 700 பேரும் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலமாக தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ஐராவத் மூலம் மாலத்தீவிலிருந்த 198 பேர் அழைத்துவரப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலத்தீவிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஏழு பெண்கள் உள்பட 198 பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று பேரும் இன்று தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தனர்.
மாவட்டம் வாரியாக,
சிவகங்கை-7
தென்காசி- 4
தேனி -6
திருவள்ளூர் -1
திருவண்ணாமலை -1
அரியலூர் -4
சென்னை -1
கடலூர் -5
தருமபுரி -1
திண்டுக்கல் -3
ஈரோடு -2
கள்ளக்குறிச்சி -3
கன்னியாகுமரி -64
கரூர் -1
கிருஷ்ணகிரி -1
மதுரை -5
நாகப்பட்டினம்-6
பெரம்பலூர் -15
புதுக்கோட்டை -11
ராமநாதபுரம் -10
சேலம்- 4
திருவாரூர் -4
திருச்சி -10
திருநெல்வேலி -5
தூத்துக்குடி -5
வேலூர் -1
விழுப்புரம் -4
விருதுநகர் -3
புதுச்சேரி -3 என மொத்தம் 198 பேர் ஆவர்.
இவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசுப் பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.