இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எப்போது போட்டி நடைபெற்றாலும், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமாவே இருக்கும். அந்த வகையில், மான்செஸ்டரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விரு அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது.
வழக்கம் போல் இம்முறையும் இந்தப் போட்டி குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளை அதிகமாக பதிவு செய்தனர். இந்நிலையில், ட்விட்டர் வரலாற்றிலேயே இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டிதான் அதிகம் விவகாதிக்கப்பட்ட ஒருநாள் போட்டியாக உருவெடுத்துள்ளது.
![Most tweeted odi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/cricket-wc-2019-ind-pak_4c34da62-9184-11e9-af8a-d24c1464451a_1806newsroom_1560868931_120.jpg)
கிட்டத்தட்ட 29 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் #INDvPAK என்ற ஹேஷ்டேக் குறித்து விவாத்தித்துள்ளனர். அதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் அதிகமாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பை தொடரில் ஏழாவது முறையாக வீழ்த்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்தது.