ETV Bharat / briefs

ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்கள்: கப்பல் மூலம் நாடு திரும்பினர்!

தூத்துக்குடி: ஈரான் நாட்டிலிருந்து 687 இந்தியர்கள் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர்.

ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்கள்: கப்பல் மூலம் நாடு திரும்பினர்.
Indians return from iran by ship
author img

By

Published : Jul 2, 2020, 10:20 AM IST

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஈரானில் சிக்கித்தவித்த தமிழர்கள் உள்பட இந்தியர்கள் 713 பேர் முதற்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 700 பேரும் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் ஐராவத் மூலம் மாலத்தீவில் இருந்த 198 பேர் அழைத்து வரப்பட்டனர்.

இந்தச் சூழலில் ஈரான் நாட்டிலிருந்து நாடுதிரும்ப முடியாமல் தவித்த 687 இந்தியர்கள்‌ ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஈரான் நாட்டின் பந்தர்அபாஸ் துறைமுகத்திலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர் கிளம்பிய ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் நேற்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 530 உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தாயகம் வந்தடைந்தனர்.

இவர்களில் 35 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் முறையே கன்னியாகுமரி (530), தூத்துக்குடி (33), நாகப்பட்டினம் (27), திருநெல்வேலி (26), ராமநாதபுரம் (16) விழுப்புரம் (8), கூடலூர் (8), அரியலூர் (1), காஞ்சிபுரம் (1), தஞ்சாவூர் (1) மற்றும் மயிலாடுதுறை (1) சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டடது. தொடர்ந்து, குடியுரிமை அலுவலர்கள் சோதனையை தொடர்ந்து அரசு பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.