ETV Bharat / briefs

ஹெச்-1 பி விசா விவகாரம்: வழக்குத் தொடர்ந்த இந்தியர்கள்

வாஷிங்டன்: ஹெச் -1 பி விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவிற்கு  எதிராக 174 இந்தியர்கள் அடங்கிய குழுவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

author img

By

Published : Jul 17, 2020, 12:35 AM IST

எச்-1பி விசா விவகாரம்: வழக்கு தொடர்ந்த இந்தியர்கள்

ஹெச் -1 பி பணி விசாக்கள் வழங்குவதை இந்தாண்டு இறுதிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு, ஜூன் 22ஆம் தேதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டார்.

H-1 B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவாகும்; இதன்மூலம் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்தும். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவை நம்பியுள்ளன.

ஹெச்-1 பி விசா தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவிற்கு எதிராக 174 இந்தியர்கள் அடங்கிய குழுவினர் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கொலம்பியா மாவட்ட நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சன், இதுதொடர்பாக பதிலளிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் சாட் எஃப் வுல்ஃப் , தொழிலாளர் செயலாளர் யூஜின் ஸ்காலியா ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பினார்.

"10052 இன் H-1B / H-4 விசா தடை அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது, குடும்பங்களை பிரிக்கிறது மற்றும் சட்டத்தை மீறுகிறது” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. புதிய H-1B அல்லது H-4 விசாக்களை வழங்குவதற்கான தடையை ரத்து செய்து, அறிவிக்கக் கோரி இந்த வழக்குத் தொடரப்பட்டது. H-1B மற்றும் H-4 விசாக்களுக்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தொடர்பான முடிவுகளை வெளியிட கோரியும் இந்த வழக்கு நீதிமன்றத்தை வலியுறுத்துகிறது.

H-4 விசா என்பது அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) H-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் விசா ஆகும்.

"எங்கள் நாட்டின் குடிவரவு அமைப்பின் நிர்வாகத்தில், அமெரிக்காவின் தொழிலாளர் சந்தையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தாக்கம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக தற்போதைய அசாதாரண சூழலில் உள்நாட்டு வேலையின்மை மற்றும் தொழிலாளர் தேவை ஆகியவற்றை கருத்தில்கொள்ள வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.