இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், தற்போது பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் எழுச்சிபெற்று சிறப்பாக ஆடி வருகிறது. இதனால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிதான் உதவ வேண்டும். இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிடும். மேலும், பாகிஸ்தான் அணி அடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று 11 புள்ளிகளுடன் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் அணி, இந்தியாவை தோற்கடிக்கும்.
இந்தத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு 1992 தொடர் போலவே போட்டியின் முடிவுகள் அமைவதால், அவர்கள் நிச்சயம் கோப்பையை வெல்வார்கள். பாகிஸ்தான் அணியை என்றும் ஏளனமாக நினைக்காதீர்கள், அப்படி நினைத்தால் அவர்கள் கம்பேக் தந்து உங்களது நினைப்புகளை தவிடுபோடி ஆக்குவார்கள்" என தெரிவித்தார்.
உலகக்கோப்பைத் தொடர் தற்போது பல்வேறு ட்விட்ஸ்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள், ஒன்பது போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், அதிகபட்சமாக ஆறு போட்டிகளில் வெற்றிபெற்றால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 7 போட்டிகளில் 6இல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் அரையிறுதிச் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது. அதேசமயம், சொந்த மண்ணில் தொடரில் விளையாடுவதால், இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இங்கிலாந்து அணி ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி, மூன்று தோல்வி என எட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
![ENG](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3680428_ts.jpg)
இந்தத் தொடரின் தொடக்கத்தில் தோல்விகளை மட்டுமே பாகிஸ்தான் அணி சந்தித்து வந்ததால், அவர்கள் அரையிறுதிக்குள் நுழைய மாட்டர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் கம்பேக் தந்துள்ளது. முதலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான், நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை காலி செய்தது.
இதன் மூலம், பாகிஸ்தான் அணி ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை என ஏழு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமென்றால், இந்தியா இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டும். அப்படி இல்லை என்றால் நியூசிலாந்து, இங்கிலாந்து அணியிடம் வெற்றிபெற வேண்டும். இதில் எதாவது ஒன்று நடைபெற்றால் கூட இங்கிலாந்து 10 புள்ளிகள்தான் பெற்றிருக்கும்.
![PAK](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3680428_t.jpg)
அதேசமயம், பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 11 புள்ளிகளுடன் நான்காவது அணியாக அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.