திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட அம்சம் நகர்ப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சேவல் சண்டை நடத்துவதாக, திருவள்ளூர் நகர் காவல் ஆய்வாளர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரண்டு சேவல்களை வைத்து சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பி ஓடியவர்களை காவலர்கள் விரட்டிச் சென்று நான்கு பேரை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் இந்திரா நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (30), அம்சா நகரைச் சேர்ந்த பாலாஜி (32), அமானுல்லா (31), மணிகண்டன் (30) என தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டைக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும்'