ETV Bharat / briefs

அடுத்த வருஷம் மிஸ் ஆகாது - வாட்சன் நம்பிக்கை - ஹர்பஜன் சிங்

அடுத்த வருடம் இன்னும் வலிமையாக வருவோம் என, சென்னை வீரர் வாட்சன் தெரிவித்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

இந்த வருஷம் மிஸ் ஆன மாதிரி அடுத்த வருஷம் மிஸ் ஆகாது - வாட்சன் நம்பிக்கை
author img

By

Published : May 17, 2019, 7:43 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை மும்பை அணியிடம் தாரைவார்த்தது.

இப்போட்டியில், சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் இறுதி ஓவர் வரை களத்தில் போராடினார். 59 பந்துகளில் 8 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என 80 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

watson
ரத்தக்காயத்துடன் ஆடிய வாட்சன்

மேலும், அவர் அப்போட்டியில் ரத்தக்காயத்துடன் விளையாடினார் என்ற ரசிகயத்தை சக வீரர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி, அவர் ரத்தக்காயத்துடன் விளையாடிய புகைப்படத்தையும் பகிர்ந்தார். இதையடுத்து, வாட்சனின் போராட்டக்குணத்தை கண்டு வியப்படைந்த சென்னை ரசிகர்கள், வீ லவ் யூ வாட்சன் என அவரை கொண்டாடினர்.

Watson
வாட்சன்

இந்நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக வாட்சன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த சில தினங்களாக எனக்கு ஆதரவு, அன்பு தெரிவித்த சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மும்பை அணியுடன் மோதிய இறுதிப் போட்டி மிகச் சிறப்பாக அமைந்தது. கடைசி வரை வெற்றிக்காக போராடிதான் தோல்வி அடைந்தோம். அடுத்த வருடம் இன்னும் வலிமையுடன் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் சென்னை அணியை கோப்பையை கைப்பற்ற வைப்பேன். விசில் போடுங்க" என்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.