ETV Bharat / briefs

இது கிரிக்கெட்டிற்கு நல்லது - ஆண்டர்சன்!

கரோனா‌ வைரஸ் பரவிவரும் சூழலில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் நடைபெறுவது கிரிக்கெட்டுக்கு நல்லது என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

I think it's great for the game: Anderson on Tests against WI

author img

By

Published : Jun 12, 2020, 3:12 AM IST

கரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறாமல் உள்ளன. இந்தச் சூழலில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்கவுள்ளன. வரும் ஜூலை எட்டாம் தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சவுத் ஹாம்டனில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு நாள்களுக்கு முன்னதாக பாதுகாப்புடன் இங்கிலாந்து வந்து இறங்கியது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில், "தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.

இருப்பினும் எங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த டெஸ்ட் தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த தொடர் நடைபெறுவது கிரிக்கெட் புத்துயிர் பெற நல்ல விஷயமாக இருக்கும்" என்றார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.