ETV Bharat / briefs

வாகனக் கடன் வழங்க எச்டிஃஎப்சி வங்கியுடன் கைகோர்த்த ஹூண்டாய்!

சமீபத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்திசெய்யும் விதமாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து வாகனக் கடன் சலுகைகளை அளித்துவருகின்றன. அந்தவகையில் எச்டிஃஎப்சி வங்கியுடன் ஹூண்டாய் நிறுவனம் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாகனக் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

author img

By

Published : Jun 19, 2020, 7:02 PM IST

ஹுண்டாய் வாகன கடன்
ஹுண்டாய் வாகன கடன்

டெல்லி: வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், உள்நாட்டு எச்டிஃஎப்சி வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் வழங்கவுள்ளது.

‘கிளிக் டு பை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, 9 லட்சம் பார்வையாளர்கள் வாகனக் கடன் சலுகைகள் குறித்து ஆராய்ந்து சென்றதாகவும், இதுவரையில் 17ஆயிரம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகை: இண்டஸ்இண்ட் வங்கியுடன் மாருதி சுசூகி!

தற்போது உள்நாட்டு வங்கியான எச்டிஃஎப்சி உடன் இணைந்து, வீட்டிலிருந்தே வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்திற்கான வங்கிக் கடனின் ஒப்புதலைப் பெற முடியும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.